ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் தொடர்பு இருப்பதை அடுத்து கொச்சியில் இருந்து தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் கோவை வந்தனர்.
இலங்கை குண்டுவெடிப்பு! கோவையில் என்ஐஏ சோதனை - சமூக வலைதளம்
கோவை: இலங்கை குண்டுவெடிப்பு சம்பந்தமாக கோவையில் உள்ள உக்கடம், அன்பு நகர், குனியமுத்தூர் உட்பட ஏழு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
அவர்களுடன் கோவையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் இன்று காலை அன்பு நகர் பகுதியில் உள்ள அசாருதீன், போத்தனூரில் சதாம் அக்ரம் ஜிந்தா, குனியமுத்தூரில் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட 7 பேர் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சோதனைக்கு பாதுகாப்பாக கோவை மாநகர காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். காலை முதல் நடைபெற்றுவரும் இந்தச் சோதனையில் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இதில் எந்தவிதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவிருகிறது.