தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அமலாக்கத்துறை அதிகாரி கைது - சட்டம் தன் கடமையை செய்யும்" - அமைச்சர் முத்துசாமி! - CM comprehensive medical insurance scheme

லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடைமை செய்து உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

கோவையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம்
கோவையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 4:51 PM IST

கோவையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம்

கோயம்புத்தூர்: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று (டிச. 2) நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு, காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிருகுருபிரபாகரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளோம். அதற்கு தேவையான தரவுகளை பெற்றுத்தர பலவகைகளில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்தினர் மருத்துவ வசதி பெற ஏதுவாக இருக்கும். இது மட்டுமின்றி 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடும், 52 பொது மருத்துவ சிகிச்சைகளும், 6 வித அறுவை சிகிச்சைகளும் இந்த காப்பீடு மூலம் பெற முடியும். அதைத்தொடர்ந்து, குடும்ப ஆண்டு வருமானத்தை உயர்த்த முடியுமா, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணமாக வழங்குவீர்களா போன்ற கேள்விகளுக்கு, அவற்றிற்கெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

சட்டம் தன் கடமையைச் செய்யும்: தொடர்ந்து ஈடி விவகாரத்தில் அதிகாரி சிக்கி உள்ளது குறித்தான செய்தியாளரின் கேள்விக்கு, "அது யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்" எனத் தெரிவித்தார். முன்னதாக பேசிய அமைச்சர், "தற்போது வரை வேலை வாய்ப்பு கிடைக்க 2 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளனர். இந்த விகிதம் அதிகரிக்க அதிகளவில் வாய்ப்பு உள்ளன. தற்போதுள்ள இளைஞர்கள் தனியார் வேலைவாய்ப்புகளை பெறவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மத்திய படைகளை தமிழக காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா? - கே.எஸ்.அழகிரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details