தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேலைக்குப் போடா'ன்னு சொன்ன தாயை கொன்ற மகன்! - கொலை

கோவை: வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போக வேண்டியதுதானே என்று வலியுறுத்திய தாயை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

தாயை கொன்ற மகன் கைது

By

Published : May 26, 2019, 11:49 AM IST

பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி செல்வ கணபதி நகரைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது கணவர் பெருமாள்சாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், மகன் மௌனகுருசாமி, தாயார் செல்லம்மாள் ஆகியோர் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை தாயார் செல்லம்மாள் மௌனகுரு சாமியிடம், படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போக வேண்டியதுதானே என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மௌனகுரு தாயை சுவரின் மீது தள்ளிவிட்டு சென்றுவிட்டார். பின்னர், இரவு 8 மணியளவில் வீடு திரும்பியபோது செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அங்கு விரைந்துவந்த காவல் துறையினர் செல்லம்மாள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், மௌனகுருசாமியை கைது செய்து விசாரித்ததில், தாயை ஆத்திரத்தில் தான் தள்ளிவிட்டுச் சென்று விட்டதாக மெளன குரு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

பெற்ற தாயை தள்ளிவிட்டு மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details