கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ராசாமணி, "கோவையில் போராட்டம் நடத்திவரும் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்மூலம் இருதரப்பினரும் பிரச்னைகளைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்புப் பணிகள், சோதனை பணிகளை மேற்கொண்டுவருகிறோம்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வகையில் நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். இதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் அவர்களது கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச்செல்வேன்" என்றார்.
இதையும் படிங்க:ஜேஎன்யூ தாக்குதலுக்கு காரணம் பாஜக - மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு குற்றச்சாட்டு