தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் இடிந்து விழுந்த ஸ்மார்ட் சிட்டி சுற்றுச்சுவர்

கோயம்புத்தூர்: நேற்றிரவு (ஏப்ரல்.14) பெய்த கனமழையால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்
கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்

By

Published : Apr 15, 2021, 4:31 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கரும்புக்கடை அடுத்த சேரன் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 12 அடி உயர சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

நேற்றிரவு பெய்த கனமழையால் அந்த சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இரவில் சுவர் விழுந்ததால் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பகல் நேரத்தில் இந்த சுவர் அருகேதான் குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பார்கள். கால்நடைகள் அங்குதான் கட்டி வைக்கப்பட்டிருக்கும். இரவு நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சுற்றுச்சுவர் தரமில்லாமல் கட்டப்பட்டு வருகிறது" என்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

இதையும் படிங்க: காண்போரைக் கவரும் கலைநயமிக்க சுவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details