கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்த அறிக்கையின் படி, கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான இலக்கிய திருவிழா ‘சிறுவாணி இலக்கியத் திருவிழா’ என்னும் தலைப்பில் நாளை (பிப்.25) மற்றும் நாளை மறுநாள் (பிப்.26) ஆகிய இரு நாட்களில் நடைபெறுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவைமாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இலக்கிய திருவிழா பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.