கோயம்புத்தூர்: சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரிக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அலுவலர்கள் பயிற்சிக்காக வந்துள்ளனர்.
பயிற்சிக்கு வந்த பெண் விமானப்படை அலுவலர் ஒருவர், கடந்த 10ஆம் தேதி தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு பயிற்சிக்கு வந்த அமிர்தேஷ் என்ற விமானப்படை அலுவலர், பெண் அலுவலரை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் கோயம்புத்தூர் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் விமானப்படை கல்லூரியில் (IAFC) பயிற்சியில் இருந்த அமிர்தேஷ் என்ற விமானப்படை அலுவலரை கோயம்புத்தூர் காவல் துறையினர் கைது செய்து நேற்று (செப்.25) இரவு, நீதிபதி இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விமானப்படை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.