தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தொடரும் பாலியல் வன்முறை: மாணவி தற்கொலை முயற்சி - பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாணவி   தற்கொலை முயற்சி
கோவை மாணவி தற்கொலை முயற்சி

By

Published : Nov 25, 2021, 2:19 PM IST

கோயம்புத்தூர்:கோவை அருகே தனியார் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சக மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல

காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில், உறவினர் ஒருவர் மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மாணவியின் உறவினர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டு குறித்து தவறான புகார் அளிக்க வேண்டாம் - அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details