தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் வரையப்பட்ட குதிரையின் படம் - 'தாய்' என நினைத்து பின்னாலே சென்ற குதிரைக்குட்டி - குதிரை படம்

கோவையில் பேருந்தில் வரையப்பட்ட குதிரை படத்தைக்கண்ட குதிரைக்குட்டி ஒன்று தனது தாய்க்குதிரை என நினைத்து பேருந்தின் பின்னால் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Etv Bharat v
Etv Bharat பேருந்து பின்னால் சென்ற குதிரை

By

Published : Sep 12, 2022, 10:58 PM IST

கோயம்புத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சாலையில் சுற்றி வருகின்றன. அங்குள்ள தோட்டங்களில் உள்ள புற்களை உணவாக உண்டு, அப்பகுதியில் சுற்றி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்குச் சென்றதால் அதனைப் பிரிந்து குதிரைக்குட்டி தாய்க் குதிரையை தேடி வந்தது. இந்நிலையில் இன்று (செப்.12) பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை படம் வரையப்பட்டிருந்ததைப் பார்த்த அந்த குதிரைக்குட்டி பேருந்தை செல்லவிடாமல் பேருந்தையே சுற்றி வந்தது.

பேருந்தில் வரையப்பட்ட குதிரையின் படம் - 'தாய்' என நினைத்து பின்னாலே சென்ற குதிரைக்குட்டி

சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பும்போது தனது தாய் குதிரை இருப்பது போன்ற உருவத்தைப்பார்த்து, பேருந்தை விடாமல் துரத்திச்சென்று கனைத்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் குட்டி குதிரையின் பாசத்தைப்பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த ஒருவரால் செல்போனில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:Viral Video : ஆட்டோவை முட்டி எறிந்த காட்டெருமை

ABOUT THE AUTHOR

...view details