சென்னையிலிருந்து கோவை வந்த செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘தமிழ்நாடு அரசு இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களுக்கு புதிதாக கொண்டுவந்துள்ள பாடத்திட்டம் 240 நாட்கள் படிக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
‘ஜூலை 2ஆம் தேதி புதிய மாற்றம் வரும்’ - செங்கோட்டையன் - செங்கோட்டையன்
கோவை: ஜூலை 2ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளிக்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கையின்போது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா ஆட்சியின்போது, 37 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரம் மடிக்கணினிகள் நான்கு கட்டமாக வழங்கியுள்ளோம். 2017-18ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கான புதிய திட்டங்கள் குறித்து இரண்டாம் தேதி சட்டப்பேரவையில் நடைபெறும் பள்ளிகல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மனித நேயத்தோடு எல்லோருக்கும் அனைத்து பணியையும் நிறைவேற்ற நினைக்கிறது. ஆனால், இன்று இருக்கும் நிதி நெருக்கடியில் எல்லோரும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும்போது ஆசிரியர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.