கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியில் 17 வயது பள்ளி மாணவன், கடந்த ஆண்டு இருசக்கர வாகனத்தில் ஆழியாறு சென்று தனது நண்பரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தார். அப்போது வால்பாறைசாலையில், ஜெஜெ நகர் அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் மணிகண்டனின் கால் உடைந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆழியாறு போலீஸார் பள்ளி மாணவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள இளஞ்சிறார் சீர்திருத்த மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தி்ல் கொண்டும், இளைஞர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2015ன் படி, மாணவரை கோட்டூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போக்குவரத்து காவலருடன் இணைந்து, 10 நாட்கள் மாலை 4 மணி முதல் 7 மணி வரைபோக்குவரத்தை சரி செய்யவேண்டும்.