தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் பெட்ரோலிய குழாய்கள் அமைக்க எதிர்ப்பு! - எதிர்ப்பு

சேலம்: கோவை முதல் இருகூர் வரை பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக சேலம் விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேலத்தில் பெட்ரோலிய குழாய்கள் அமைக்க எதிர்ப்பு!

By

Published : Jul 16, 2019, 10:17 PM IST

கோயம்புத்தூர் இருகூர் முதல் கர்நாடக தேவனகுந்தி வரை விவசாய விளைநிலத்தில் பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்ல குழாய்கள் அமைக்கப்போவதாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது.

இந்தத் திட்டதிற்காக பாரத் பெட்ரோலிய நிறுவனம் விளைநில உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்தக் குழாய்கள் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி தாலுகா ஆகிய பகுதிகளை பாதிக்கிறது.

இதனால் நங்கவள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த தோரமங்கலம், தாசகாபட்டி, சூரப்பள்ளி, பெரியசோரகை ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தை பற்றிய ஆலோசனை கூட்டத்தை கடந்த செவ்வாய் கிழமை அன்று நங்கவள்ளி பழக்காரனூரில் நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், ஒன்றிய துணைத் தலைவர் பொன்.பீட்டர் உட்பட ஏராளமான விசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சி.பி.எம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, உயர் மின்னழுத்த கோபுரம் எதிர்ப்பு கூட்டு இயக்க நங்கவள்ளி பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் இத்திட்டத்தைப் பற்றி விசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கமளித்தனர்.

இறுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு பதிலளிக்கும் விதமாக, 11 கேள்விகளும் அக்கேள்விகளுக்கு உரிய நகல்களும் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் அது கிடைத்தவுடன் இத்திட்ட அனுமதி பற்றி முடிவு எடுக்கலாம் என்றும் பதிலளிக்கும் வரை இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் நங்கவள்ளி ஒன்றிய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details