கோவை: பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவரும் ,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவருமான சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிராக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட அனிதா உயிரிழந்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.அவரது நினைவு தினமான நேற்று(செப். 1) குடியரசு தலைவருக்கு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடிதம் அனுப்பிய பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவரும் முன்னாள் அரசு பள்ளி ஆசிரியருமான சபரிமாலா கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனிதா நினைவு நாளில் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவர், பிரதமர், அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்படும்.