சென்னையை சேர்ந்த சத்தியராஜுக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்தர பதிவேடு குற்றவாளியான அவர், கடந்த 2013ஆம் ஆண்டு தனது சகோதரியோடு சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஏரியா தகராறு காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பல் சத்தியராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சத்தியராஜுக்கு ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பிய நிலையில், உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக விஜி என்பவர் சரணடைந்த நிலையில், அப்பன் ராஜ், வேலு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மூவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.