கோயம்புத்தூர்:நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் திமுக 7 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 1 வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக தலைமைக்கழகம் அறிவித்த வேட்பாளர் விஜயகுமாருக்கும், அதே கட்சியைச் சேர்ந்த திமுக நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டன. பேரூராட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று (மார்ச் 26) காலை நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தை சுற்றி தகர சீட்டுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவுக்கு பொதுமக்கள் வெளியில் நிறுத்தப்பட்டனர். கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி தலைமையில் 150 காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போட்டியின்றி தேர்வு