கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இன்று 12ஆவது யானைகள் நல்வாழ்வு முகாம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி இந்த முகாமைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, புதுவையில் இருந்து கோயில், மடங்களைச் சேர்ந்த 28 யானைகள் இந்த முகாமில் பங்கேற்கின்றன.
யானைகள் புத்துணர்வு முகாம் இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைகள் பார்வதி, பழனி - ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், திருச்சி மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் காந்திமதி, இரட்டை திருப்பதி அரவிந்தலோசனார் கோயில் யானை லட்சுமி உள்ளிட்ட 26 யானைகள் முகாமிற்கு வந்துள்ளன. மேலும் புதுவையைச் சேர்ந்த இரு யானைகள் நாளை முகாமிற்கு வருகின்றன.
இன்று முதல் 48 நாட்களுக்கு கோயில், மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு நடைப்பயிற்சி, மூலிகை உணவு, பசுந்தீவனம், மருத்துவ சிகிச்சை போன்றவை வழங்கப்பட இருக்கின்றது.
இதனைத் தொடங்கி வைத்த பின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, ' அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த கோயில் யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழம் உள்ளிட்டவற்றைகை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், யானைகள் முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கால்நடை, வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை இணைந்து ஏற்பாடுகள் செய்துள்ளது. 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறுகின்றது' எனவும் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி பேட்டி 'யானைகளுக்கு நடைப்பயிற்சி, பசுந்தீவனம், மருத்துவம் போன்றவை வழங்கப்படுகின்றது. இந்த ஏற்பாடுகள் கோயில் யானைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். யானைகளின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இந்த முகாம் இருக்கும்' என்ற அவர் 'இந்த முகாமிற்காக ரூ. 1.50 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கி் இருக்கின்றது' என்றார்.
இதையும் படிங்க:'கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது' - நடிகை கஸ்தூரி