தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
வால்பாறையில் 5ஆவது நாளாக தொடரும் கனமழை! - western ghats
கோவை: வால்பாறையில் ஐந்தாவது நாளாக இன்றும் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக இன்று வால்பாறையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக பெய்துவரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்த மழைக் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு, வாழைத் தோட்டம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.