தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடை மழையிலும் அசையாமல் நின்ற மது பிரியர்கள்! - tamil latest news

கோவை: மழையிலும் வரிசை கலையாமல் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

மழையிலும் வரிசை கலையாமல் நின்ற மதுப்பிரியர்கள்
மழையிலும் வரிசை கலையாமல் நின்ற மதுப்பிரியர்கள்

By

Published : May 8, 2020, 12:22 AM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று(மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் கடைக்கு வரும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்; குடைகளை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு சிலர் மட்டுமே குடைகளை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் கோவையில் திடீரென வேகமாக மழை பெய்தது. அந்நிலையிலும் டாஸ்மாக் கடைக்கு வந்தவர்கள் வரிசை கலையாமல் நின்று, மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அங்கு வந்தவர்களில் ஓரிருவர் மட்டுமே குடைகளை எடுத்து வந்திருந்தனர்.

மழையிலும் வரிசை கலையாமல் நின்ற மது பிரியர்கள்

மேலும் டாஸ்மாக் கடைக்கு வரும் போது குடைகளை எடுத்து வரவேண்டும் என்று ஏற்கெனவே அரசு கூறியிருந்தது தானே என்று வரிசையில் நின்றவர்களிடம் காவல்துறையினர் கேள்வி கேட்டனர்.

அதேசமயம் கோவை லாலி ரோடு டாஸ்மாக்கில் நின்றவர்களில் ஒருவர் ரெயின் கோர்ட் அணிந்து வரிசையில் மதுவினை வாங்க காத்திருந்தது அங்குள்ளவர்களை திரும்பி பார்க்கச் செய்தது.

இதையும் படிங்க: ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்த குடிமகன்கள்: அதிரடி காட்டிய போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details