கோயம்புத்தூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில் தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை இணை செயலாளர் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது குழு நிறுவனங்களின் குழு உறுப்பினர்களான அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஆறு பயனாளிகளுக்கு ஆதி திராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைப்புக்கான இணைய வழி பட்டாக்களையும், சாலை விபத்தில் மரணம் அடைந்த பத்து நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தர பாண்டியன் வழங்கினார்.