கோவை செய்தியாளர் மன்றத்தில் அனைத்து ஜமாஅத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் இன்று செய்தியாள்ரகளை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பிப்ரவரி இரண்டாம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நடக்கும்” என்றார்.
கோவையில் ராஜா ஹுசைன் பேட்டி தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் பேரணியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள். மத்திய அரசின் இந்த சட்டத்தினால் முஸ்லிம்கள் அனைவரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். மேலும் டெல்லியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு அரசு இந்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
சீனா வாழ் தமிழர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்