தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு; பல்வேறு அமைப்பினர் போராட்டம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண் படுகொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் பல்வேறு அமைப்பினர் போரட்டம் நடத்தினர்.

பல்வேறு அமைப்பினர் போராட்டம்
பல்வேறு அமைப்பினர் போராட்டம்

By

Published : Oct 3, 2020, 2:57 PM IST

கோயம்புத்தூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன் அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அது அமைப்பினர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உத்தரப் பிரதேச அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதிகா பேசுகையில், “இந்தியாவில் நிர்பயா கொலைக்கு அடுத்து இந்த கொடூரமான கொலை நிகழ்ந்துள்ளது. பிஜேபி ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் மகளிர்கான பாதுகாப்பு என்பது இல்லாத ஒன்றாக இருந்து வருகிறது. உடனடியாக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி பதவி விலக வேண்டும்.

மேலும் அந்த மாநிலத்தின் டிஜிபி அந்தப் பெண் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்போது உள்ள பாஜக அரசு இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள், பட்டியலின பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அரசாக மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு அந்த பெண்ணிற்கு நீதி வாங்கி தர வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் தலையிட்டு இழந்த அந்த பெண்ணிற்கு நீதி வாங்கித் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு விவகாரம்: எஸ்.பி. இடைநீக்கம்

ABOUT THE AUTHOR

...view details