கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்குத் தனியார் நிறுவனம் மூலமாக ஒன்பது லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வென்டிலேட்டர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையிலுள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். இதையடுத்து, அங்குள்ள மக்களிடம் உணவு பற்றி கேட்டறிந்தார்.