கோவை அடுத்த பேரூர் பகுதியைச் சேர்ந்த முரளி. இவர் கடந்த வெள்ளியன்று காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் சிங்காநல்லூர் சென்றுள்ளார். அப்போது பயணிகள் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக லக்கேஜ் டிக்கெட் வழங்கியுள்ளனர். இது குறித்து நடத்துநரிடம் கேட்டதற்கு அவரை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த முரளி நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளை; பொதுமக்கள் புகார்! - private bus
கோவை: தனியார் பேருந்துகள் வார இறுதி நாட்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பயணிகள் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக லக்கேஜ் டிக்கெட் வழங்குவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் புகார் மனு அளித்துள்ளனர்.
பின்னர் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். வார இறுதி நாட்கள் என்பதால் தென்மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்வதால் திட்டமிட்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். என்னிடம் லக்கேஜ் இல்லாதபோது அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.