கோவை:திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் 2020ஆம் ஆண்டு நகைக்காக ஒரு பெண்ணை கொலைசெய்த வழக்கில் கடந்தாண்டு ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அங்கிருந்து கோவை மத்திய சிறைக்கு சக்திவேல் மாற்றப்பட்டு ஒன்பதாவது பிளாக்கில் விசாரணை கைதியாக இருந்தார். கடந்த சில நாள்களாக சக்திவேல் சிறை வளாகத்தில் யாருடனும் பேசாமல் இருந்துவந்துள்ளார்.