தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.14) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 4,100 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
நான்காயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிய பிரேமலதா விஜயகாந்த்! - பொங்கல் பண்டிகை
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்மேடு பகுதியில் உள்ள 4,100 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
premalatha-vijayakanth-donates-pongal-items-to-4000-families
அதன்பின் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் முதலமைச்சரானால் விவசாயிகள், நெசவாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். இந்த தை பொங்கல் அனைவருக்கும் இனிதே அமையட்டும்” என்றார்.
இதையும் படிங்க: மாயூரநாதர் ஆலய அம்பாளுக்கும் சுவாமிக்கும் நெய் அபிஷேகம்!