கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற சிபி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 1.80 லட்சம் வாக்குகள் கூடுதலாக வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்த வாக்கினை மக்கள் அளித்துள்ளார்கள். மதச்சார்புடைய இந்த அரசிற்கு எதிராகவும் மக்கள் வெகுண்டெழுந்தது தெரிகிறது.
பி.ஆர் நடராஜன் செய்தியாளர் சந்திப்பு சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய அனைத்து எம்.பி.க்கள் ஆதரவுடன் செயல்படுவேன். மேலும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன். நொய்யல் நதியில் இருக்கும் பிரச்னைகளை கலைந்து நதியை மீட்டு எடுக்கும் முயற்சியில் நாம் இப்போது உள்ளோம்.
மதச்சார்புடைய பாஜக அரசை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது எங்களைப் பொறுத்தவரை வருத்தமான ஒன்றுதான். ஆனால் ஒற்றுமையை செயல்படுத்தும் அரசாக இந்த மத்திய அரசு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்தார்.