தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2021, 5:58 PM IST

Updated : Dec 31, 2021, 6:27 PM IST

ETV Bharat / state

Powerloom Owners go on Strike: விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

Powerloom Owners go on Strike: அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கூலி உயர்வை வரும் 9ஆம் தேதிக்குள் வழங்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நெசவு ஆலை
நெசவு ஆலை

Powerloom Owners go on Strike: கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சுல்தான்பேட்டை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சோமனூர் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், "கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெசவு ஆலை

எனவே அடுத்தகட்ட போராட்டமாக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கூலி உயர்வை வரும் 9ஆம் தேதிக்குள் வழங்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

வேலைநிறுத்தம் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பியுள்ள சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க:வீட்டின் வெளியே இருந்த R15 பைக் மாயம் - சிசிடிவி மூலம் விசாரணை

Last Updated : Dec 31, 2021, 6:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details