தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா.. கோவையில் இருந்து ஈபிஸ்க்கு வந்த அழைப்பு... - Posters have been put up at various places in Coimbatore asking Edappadi Palaniswami to come and take over leadership of admk

அதிமுக சட்டப்பேரவை கொறடா எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளரான அம்மன் அர்ஜுனன் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை ஏற்க வா என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா.. கோவையில் இருந்து ஈபிஸ்க்கு வந்த அழைப்பு...
கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா.. கோவையில் இருந்து ஈபிஸ்க்கு வந்த அழைப்பு...

By

Published : Jun 30, 2022, 7:57 AM IST

கோயம்புத்தூர்:அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் பல்வேறு வழிகளில் அவர்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் சட்டப்பேரவை கொறடாவுமான எஸ் பி வேலுமணியின் தீவிர ஆதரவாளரான

அதிமுகவின் சட்டப்பேரவை கொறடா எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளரான அம்மன் அர்ஜுனன் அழைப்பு
அம்மன் அர்ஜுனன் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவர் கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ளார்.
கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா.. கோவையில் இருந்து ஈபிஸ்க்கு வந்த அழைப்பு...

அந்த போஸ்டரில் EPS- EVER GREEN POWERFUL STAR என்ற வாக்கியமும், கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா... என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை மாநகரில் அவினாசி மேம்பாலம், லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட மறுக்கும் ஈபிஎஸ்.. பின்னணி என்ன ?

ABOUT THE AUTHOR

...view details