தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
திமுக மாபெரும் வெற்றி பெறும் - ஸ்டாலின் பேச்சு! - பொள்ளாச்சியில் ஸ்டாலின் பேச்சு
பொள்ளாச்சி : நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும்,18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றியைப் பெறும் என பொள்ளாச்சியில் மேற்கொண்ட பரப்புரையின்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அப்போது ஸ்டாலின் பேசுகையில், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தப்ப வைக்க ஆளும் கட்சியினர் முயற்சிக்கின்றனர். தவறு செய்யவில்லையென்றால், காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழலை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் அதிகப்படியான ஊழலை செய்தது அமைச்சர் வேலுமணி தான். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் முதன்முறையாக சோதனை செய்தபோது ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது நாள் சோதனையில் பணத்தை யாரோ கொண்டு வந்து வைத்து பின் சோதையில் பிடிபட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றிபெறும் என ஸ்டாலின் பேசினார்.