தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு - தாசில்தார்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் விளம்பர பதாகைகளை ஒட்டி பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Election commission
Voter ID

By

Published : Dec 10, 2020, 10:30 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சார்ந்த பகுதிகளில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் வழிகாட்டுதலின்படி புதிய வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளிலும் விளம்பர பதாகைகளை ஒட்டி பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் தணிகைவேல், பொள்ளாச்சி வட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details