திமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' தேர்தல் பரப்புரைக்கு வந்த மாநிலச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு சூளேஸ்வரன்பட்டியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: திமுகவினரை ஆடல் பாடலுடன் வரவேற்ற பழங்குடியின மக்கள்! - கோவை மாவட்டச் செய்திகள்
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவடப்பு பழங்குடி மக்கள் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' பரப்புரை சென்ற திமுகவினருக்கு ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 18 கிராமங்களில் முக்கியமான மாவடப்பு கிராமத்தில் பழங்குடி மக்களைச் சந்திக்கச் சென்றபோது அவர்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக திமுகவினரை வரவேற்றனர்.
இதனையடுத்து பழங்குடி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, "மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மாவடப்பு பகுதி மக்கள் முக்கியத் தொழிலாக விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். அதனால், விளை பொருள்களைக் கொண்டுசேர்க்க சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.