தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை தாக்கியத்தில் சிறுமி உள்பட இரண்டு பேர் பலியானதால் வனத்துறையினரை முற்றுகையிட்டு அம்மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றிகையிட்ட மலைவாழ் மக்கள்

By

Published : May 26, 2019, 9:01 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளமாக வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ரஞ்சனாவை இரவு நேரத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் நேற்று இரவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வந்த வனத்துறை அலுவலர்கள், காவல்துறையினரிடம் மலைவாழ் மக்கள் வழிமறித்து நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எங்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details