கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி 5ஆம் தேதி அருளானந்தம், ஹெரோன்பால், பாபு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
பிணை கேட்டு மனுத்தாக்கல்
பின்னர் இவர்கள் மூவரும் கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கால் இவர்களது காவல் நீட்டிப்பு நீண்டுகொண்டே சென்றது.
இதனைத் தொடர்ந்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அருளானந்தம் பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
சாட்சியங்களை களைக்கக் கூடும் என வாதம்
இந்நிலையில் இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 7) விசாரனைக்கு வந்தது. அப்போது இதுவரை 8 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், பிணை வழங்கினால் சாட்சியங்களை களைக்கக் கூடும் என சிபிஐ தரப்பு வாதிட்டது. இதனையடுத்து அருளானந்தத்தின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க:காவலாளி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குக - உயர் நீதிமன்ற மதுரை கிளை