தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் பயங்கரவாதிகளுக்கு தர்ம அடி கொடுத்த நண்பர்கள்! - பாலியல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாத சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அது தொடர்பான காணொளிகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரி ராஜன் ஆகிய இருவரையும் பாதிக்கப்பட்ட உறவினர்களும், குற்றவாளிகளின் நண்பர்களும் தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollachi Rapist

By

Published : Mar 14, 2019, 3:26 PM IST

பொள்ளாச்சியில் இளைஞர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தனக்கு நேர்ந்த அவலம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் இரண்டு வார காலமாக காவல்துறை எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடூர கும்பலிடம் சிக்கி, கொடுமையை அனுபவிக்கும் காணொளி வெளியாகி பலரையும் கலக்கமடையச் செய்தது. மீண்டும் இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த கும்பல் குறித்த விவரங்கள் தெரியவந்தன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகிய நால்வரும் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்த பாலியல் வன்கொடுமை அரங்கேற்றம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜனிடம் விசாரிக்கும் இளைஞர்கள் சிலர், இந்த வன்கொடுமை குறித்த விவரங்களை அடித்து கேட்கின்றனர். அதற்கு அடிதாங்க முடியாமல் பேசும் திருநாவுக்கரசு, இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுடைய வீடியோவை சபரியிடமிருந்து பெற்றதாக கூறுகிறான்.

Pollachi Rapists

இளைஞர்கள் அதட்டி கேட்கும் போது மேலும் பேசும் அவர், பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய காணொளிக்களும் உள்ளன. ஒருமுறை அழைத்துச் சென்ற பெண்ணை, காணொளியை வைத்து மிரட்டி பல முறை வரவழைத்துள்ளோம். எடுக்கப்பட்ட காணொளிகள் பலரிடம் பகிரப்பட்டுள்ளது என்றும் திருநாவுக்கரசு தெரிவிக்கிறான். இதனைத்தொடர்ந்து சபரியையும், திருநாவுக்கரசையும் அந்த இளைஞர் அடித்து உதைக்கின்றனர்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி, பொது மக்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details