தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! - coimbatore court

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

By

Published : Feb 25, 2020, 8:01 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவுசெய்து, அதனைக் காணொலி எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்தது குறித்து பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை கடந்த 11ஆம் தேதி கோவை முதன்மை நீதிமன்றத்திலிருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று சேலம் மத்திய சிறையிலிருந்து காணொலி கலந்தாய்வு மூலம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்துபேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த வழக்கை வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் பார்க்க:பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் இருவருக்கு சிறை!

ABOUT THE AUTHOR

...view details