ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் 1986 முதல் 2018 வரை அக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பங்குபெற்றனர்.
பொள்ளாச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! - Pollachi
கோவை: பொள்ளாச்சி அருகே முன்னாள் பாலிடெக்னிக் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இவர்கள் சென்னை, பெங்களூர், சேலம், ஜெர்மன், துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் பல்வேறு நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின் போது கிராமப்புற அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஓர் அங்கமாக இந்த ஆண்டு அங்குள்ள மலைவாழ் மக்கள் கிராம பகுதியில் உள்ள சுல்லிமேடு, வேட்டைகாரன்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான ஒலிபெருக்கி, மின்விசிறி, நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். மேலும் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மழைநீர் சேகரிப்பு திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.