பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சிக்கு உள்ளூர், பிற மாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் குரங்கு நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.
வால்பாறை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.