தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறட்சியின் பிடியில் குரங்கு அருவி - சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கோவை: பொள்ளாச்சி குரங்கு அருவியில் வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

By

Published : Feb 25, 2020, 10:24 AM IST

pollachi
pollachi

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் காணப்பட்டது. இதனால் குரங்கு அருவியில் நீர்வரத்து குறைந்தது.

குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைவானதால், அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்தனர். இதனால் குரங்கு அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நீர்வரத்து குறைந்து காணப்படும் குரங்கு அருவி

குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து வந்த பின்னர், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கபடுவர் எனத் தெரிகிறது. வறட்சியின் காரணமாக தற்போது அருவிக்குச் செல்ல, தடை விதித்ததாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மயிலூற்று அருவி பாதையை சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details