பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு நிதியுடன் தொடங்கப்பட்டது. ரூ. 560 கோடி நிதியுடன் தொடங்கப்பட்ட பணி 80 விழுக்காடு நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு விடப்பட்டது. இதில் மூன்று மேம்பாலங்கள், ஒரு ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்றுவருகிறது. கிணைத்துக்கடவு மேம்பால பணிகள் முடிந்து கடந்த சில மாதத்திற்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ரயில்வே மேம்பாலம் இணைப்பு பணி முடிந்து சோதனை ஓட்டம் தொடங்கியது! - சோதனை ஓட்டம்
கோவை: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு பணி முடிந்து சோதனை ஓட்டம் தொடங்கியது.
இந்நிலையில் கோவில்பாளையம் அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பால பணிகள் 90விழுக்காடு நிறைவடைந்தது. அடுத்து இரும்பு பாலத்தை இணைக்கும் இணைப்பு பொருத்தும் பணி நடைபெற்றது. ராட்சச கிரேன் உதவியுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் தூணில் பொருத்தினர்.
இந்த பணிகள் முடிவடைந்து சாலையை இணைக்கும் முக்கிய பாலம் முடிவுற்று இன்று முதல் ஒரு பாலம் மட்டும் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் மீதம் உள்ள பாலத்தை இணைக்கும் பணியை வருவாய்த்துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், ரயில்வேத் துறை அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். முழு பணியும் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு விடப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.