சொந்த கிராமத்தில் வாக்களித்த பொள்ளாச்சி ஜெயராமன்! - MP ELECTION
கோவை: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தனது சொந்த ஊரான திப்பம்பட்டி கிராமத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது வாக்கினை அவரது சொந்த ஊரான திப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய துவக்கபள்ளியில் வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார்.