தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
சொந்த ஊரில் தனது வாக்கைச் செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் இருக்க தடை ஆணை கேட்டார். ஆனால், நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பித்ததால் திமுகவின் கனவு பலிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றிபெறும்" என்றார்.
இதையும் படிங்க:‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’