தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக: சட்டப்பேரவை துணை சபாநாயகர் - pollachi jayaraman

கோயம்புத்தூர்: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக என பேட்டி
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக என பேட்டி

By

Published : Dec 23, 2020, 9:02 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் புதிய நியாய விலை கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், "முதல் முதலாக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான்.

இவர்கள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது. அதிமுக மக்களுக்காக செயல்படுகிறது.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக எனப் பேட்டி

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 200 இடங்களுக்கும் மேல் கண்டிப்பாக வெற்றி பெறும். தோல்வி பயத்தில் திமுக திணறிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவார்" என்றார்.

இதையும் படிங்க: 'தபாலில் வாக்களிப்பு எனும் அறிவிப்பே பிராடுத்தனமானது' - துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details