தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை அறிந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்தத் தருணத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்றார்.