பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 22 வார்டு மற்றும் 16வது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து பொதுமக்கள், துணை சபாநாயகரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் அவர் பேசுகையில்,
'ஓட்டுக்காக ஜாதி, மதக் கலவரங்களை தூண்டி விடும் கட்சிதான் திமுக..!' - பொள்ளாச்சி ஜெயராமன் - POLLACHI JEYARAMAN
பொள்ளாச்சி: "ஓட்டு வங்கிக்காக ஜாதி மற்றும் மதக் கலவரங்களை தூண்டி விடும் கட்சிதான் திமுக" என்று, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டியுள்ளார்.
"பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என்று பொய் பரப்புரைகளை திமுக செய்து வருகிறது. இந்தியா இந்து மதத்துக்குதான் சொந்தம் என்று எந்த சட்டமும் கிடையாது. இந்தியா எல்லா மக்களுக்கும் பொதுவான தேசம். ஓட்டு வங்கிக்காக சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மை சமுதாயம் என்று ஜாதி சண்டைகளையும் மதச் சண்டைகளையும் நடத்தும் கட்சிதான் திமுக.
திமுக ஆட்சியில்தான் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்பட்டனர். கடைகள் சூறையாடப்பட்டன. ஓட்டு வங்கிக்காக, குடும்ப நலனுக்காக மக்கள் மனதில் மத பிரச்னைகளை ஏற்படுத்தி, திமுக பிளவுபடுத்தி வருகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்துவ சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக விளங்கும் அரசு அதிமுக அரசுதான், என்றார்.