தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் - பொள்ளாச்சி ஜெயராமன் - pollachi jeyaraman

கோயம்புத்தூர் : முதலமைச்சரை பாராட்ட மனமில்லாமல், தான் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறிவருகிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

jeyaraman
jeyaraman

By

Published : Sep 10, 2020, 1:03 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதேபோன்று சேரிப்பாளையத்தில் 30 முதியோர்களுக்கான உதவித் தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா பாதிப்பு காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின், கரியன் ராமசாமி கேட்டுக்கொண்டதன்படி மூன்று நாள்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன்

கரோனா காலத்திலும் முதலமைச்சர் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர், தான் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை பிரசாந்த் கிஷோர் என்பவரின் இரவல் மூளையைப் பயன்படுத்தி முன்வைக்கிறார். இது தமிழ்நாட்டு மக்களிடையே எடுபடாது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:நீட் தேர்வால் மாணவன் தற்கொலை - உறவினர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details