கோவை மாவட்டம் பொள்ளச்சியில் உள்ள கிழக்கு காவல் நிலைய வீதியில் ஒரு ஜவுளிக்கடையின் மேல்புறத்தில் வசித்துவருபவர் திருமலைக்குமார்.இந்நிலையில் இவரது வீட்டில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அந்த தீ மளமளவென பக்கத்தில் பரவத் தொடங்கியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘ஆயுத பூஜை முன்னிட்டு சாமி கும்பிட்டபோது, விளக்கு கீழே விழுந்ததால் தீ பிடித்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.’ என்றனர்.
காவல் நிலைய பகுதியில் தீ விபத்து! - காவல் நிலைய பகுதியில் தீ விபத்து
கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வீட்டில் எற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
fire
இந்த விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் பப்ஜி விளையாட்டால் வந்த வினை - இளைஞர் உயிரிழப்பு!