பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான, சேத்து மடை, ஆழியார், நவமலை, உப்பாறு பள்ளம், கோபால்சாமி மலையடிவாரம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிருந்து, வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அருகில் உள்ள தென்னந்தோப்புகளில் மரங்களை சேதப்படுத்துகின்றன.
பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்! - coimbatore pollachi
கோவை: பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
pollachi elephant issue
சில நாட்களுக்கு முன்பு, மன்னம் பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் யானை இடித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வாகன ரோந்துப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: வனத்தில் விடப்பட்ட 3 மாத அம்முக்குட்டி யானை - சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!