பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்துவருபவர் பேச்சியம்மாள்(22). கணவரை விட்டுப் பிரிந்து வாழும் இவர், தனது மகன் மதியழகன்(3), தோழி ஜெயமணி, மாமன் மகன் பிரகாஷ் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் பேச்சியம்மாளுக்கும், பிரகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், பேச்சியம்மாளின் மகன் மதியழகனை அடித்ததில் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.