தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவிக்கு மிரட்டல் விடுத்த காவலர் கைது - police arrested

கோவை: மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்த காவலரைப் பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

police

By

Published : Jun 17, 2019, 8:28 AM IST

பொள்ளாச்சி கோட்டூர் சாலை பெரியார் காலனியைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (23). இவருக்கும், சிவச்சந்திரன் என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்தகராறு காரணமாக சிவச்சந்திரனை சில ஆண்டுகளாக சவுந்தர்யா பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மகேஷ்ராஜ் (28) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார் சவுந்தர்யா. மகேஷ்ராஜ் கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலராக பணிபுரிந்துவந்துள்ளார்.

சவுந்தர்யா தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஷ்ராஜ், அவரது தாயார் தமிழரசி, சகோதரர் நாராயணராஜ் (29) ஆகியோர் சனிக்கிழமை சவுந்தர்யாவை சாதிப் பெயரைச் சொல்லி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சவுந்தர்யாக கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மகேஷ்ராஜ், நாராயண ராஜ் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

காவலர் மகேஷ்ராஜ் சவுந்தர்யாவை காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக ஏற்கனவே, கடந்த மார்ச் 23ஆம் தேதி, அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற பிணையில் மகேஷ்ராஜ் உள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details