தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பேட்டரி திருட்டு கும்பல் கைது! - பேட்டரி திருடர்கள்

கோவை: பொள்ளச்சியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் பேட்டரி திருடிவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

பிடிபட்ட பேட்டரி திருடர்கள் - நான்கு பேர் கைது!

By

Published : Jul 24, 2019, 10:53 AM IST

கோவை மாவட்டம் பொள்ளச்சியில் சில நாட்களாக இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் பேட்டரிகளை மட்டும் குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் திருடிவருவதாக லாரி ஓட்டுநர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவல் துறையினர் திருடர்களை தேடிவந்தனர்.

பிடிபட்ட பேட்டரி திருடர்கள் - நான்கு பேர் கைது

இந்நிலையில், ஊஞ்சபேலம்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்தக் காரில் லாரி பேட்டரிகள் இருந்துள்ளன. பின்னர் காரை ஓட்டிவந்த சஜித், சதீஷ்குமார், விக்னேஷ், மதன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது, கல்லூரி கால நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் கூட்டாக பல இடங்களில் பேட்டரிகளை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் இவர்களிடமிருந்து 37 பேட்டரிகள், மூன்று சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details